சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மெகா தடுப்பூசி சிறப்பு முகாமை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்துள்ளார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல் படி ஐம்பதாயிரம் இடங்களில் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மாநிலத்தில் 3 கோடியே 54 லட்சத்து 19ஆயிரத்து 980 பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட தகுதியானவர்களாக இருக்கின்றனர். ஆனால் பொதுமக்கள் தொடர்ந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கம் காட்டி வருகின்றார்கள். ba4 மற்றும் ba5 வகை கொரோனா உலகம் முழுவதும் பெரிய பாதிப்பை உண்டாக்கி வருகின்றது.
அதிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக மக்கள் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். மேலும் தமிழகத்தில் 75 நாட்களுக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இலவசமாக போடப்படும் என அறிவித்து அதில் பத்து நாட்கள் கடந்துவிட்டது. செப்டம்பர் 30ஆம் தேதிக்குப்பின் பணம் கொடுத்து தான் மருத்துவமனைகளில் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அதனால் இன்னும் மிதமுள்ள 65 நாட்களை பொதுமக்கள் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு தடுப்பூசி இலவசமாக செலுத்திக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களில் குரங்கு அமைக்கான கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டிருக்கிறது.
மேலும் கேரளாவில் இருந்து தமிழகம் வரும் 13 பரடர்களிலும் கண்காணிப்பு தீவிரமாக நடைபெற்று வருகின்றது. கேரளாவில் இருந்து வரும் ரயில்களிலும் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. தமிழகத்தில் யாருக்கும் குரங்கமை பாதிப்பு இதுவரை இல்லை. மாமல்லபுரம் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் பகுதியில் 342 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் போன்ற பணியமர்த்தப்பட்டு இருக்கின்றார்கள். வீரர்கள் தங்கும் 24 விடுதிகளையும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் கருமுட்டை விவகாரம் தொடர்பாக ஈரோடு மருத்துவமனைக்கு உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் மேல் முறையீடு செய்ய இருக்கின்றோம். இந்த விவகாரத்தில் தவறிழைத்தவர்கள் யாரும் தப்ப முடியாது நான்கு மருத்துவமனைகளை மூட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் உறுதியாக கூறியுள்ளார்.