Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மூன்றரை டன் பூக்கள் ஏலம்… ஜோராக நடைப்பெற்ற விற்பனை… மார்க்கெட்டில் குவிந்த கூட்டம்…!!

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூபாய் 245 க்கு ஏலம் விடப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் பூ மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டிற்கு சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப்  பகுதிகளில் உள்ள விவசாயிகள் பூக்களை ஏலத்திற்காக கொண்டு வருவார்கள். இங்கு தினமும் காலை 7 மணி முதல் மதியம் இரண்டு மணி வரை ஏலம் நடத்தப்படும்.

இந்நிலையில் நேற்று இந்த ஏலத்தில்  3 1/2  டன் பூக்களை ஏலத்திற்காக விவசாயிகள்  கொண்டு வந்திருந்தார்கள். இதனையடுத்து ஏலத்தின் போது  ஒரு கிலோ முல்லை பூ ரூபாய் 320 க்கும், ஜாதிமல்லி 450க்கும், சம்பங்கி  50 க்கும், செவ்வந்தி 140 க்கும், துளசி 40 க்கும், அரளி 50க்கும், மல்லிகைப்பூ  ஒரு கிலோ  245 க்கும் ஏலம் விடப்பட்டுள்ளது.

Categories

Tech |