உலகெங்கிலும் உள்ள சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்களின் செல்போன்கள், இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனத்தின் பெகாசஸ் என்ற ஸ்பைவேர் மூலம் ஒட்டுக் கேட்கப்பட்டு, அவர்களின் தகவல்கள் அரசிடம் விற்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அத்துடன், இந்த பட்டியலில் 14 நாட்டு தலைவர்களின் பெயரும் இடம்பெற்றுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பெகாசஸ் என்ற ஸ்பைவேர் மூலம், ஐபோன்கள், ஆண்ட்ராய்டு போன்களில் ஊடுருவி குறிப்பிட்ட நபர்களின் மெசேஜ்கள், இமெயில்கள், தொலைபேசி அழைப்புகள் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளது. பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தொழிலதிபர் அனில் அம்பானி, முன்னாள் சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா, தலாய்லாமா உள்ளிட்டோரின் செல்போன் எண்களும் முத்து கேட்கப்பட்டதாக தி வயர் இதழ் தெரிவித்துள்ளது. இந்தியாவில் பத்திரிகையாளர்கள் உட்பட 300 பேரின் பெயர்கள் பட்டியலில் உள்ளதாக கூறப்படுகிறது.