இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. என்ற தொழில்நுட்ப நிறுவனத்தின் பெகாஸஸ் மென்பொருள் மூலம் இந்தியாவில் மட்டும் பத்திரிகையாளர்களின் செல்போன்கள் உட்பட 300 தொலைப்பேசிகள் உளவு பார்க்கப்பட்டதாக வெளியான செய்திகள் நாடளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு பெகாசஸ் விவகாரம் நாடாளுமன்றத்திலும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இந்நிலையில் இது குறித்து இன்று நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாட்டிலிருந்து கனிமொழி, டி.ஆர் பாலு, சு. வெங்கடேசன் ஆகியோரும் காங்கிரஸ் கட்சி சார்பாக ராகுல் காந்தியும், என்.சி.பி, பி.எஸ்.பி, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், கேரளா காங்கிரஸ் போன்ற காட்சிகளிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.