Categories
தேசிய செய்திகள்

பெகாசஸ் விவகாரம்… மத்திய அரசு விளக்கம்…!!!

பெகாசஸ் உளவு மென்பொருள்களை செயல்படுத்தும் இஸ்ரேலில் உள்ள NSO நிறுவனத்துடன் எந்த வர்த்தகமும் நடைபெறவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

நாடாளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதன் காரணமாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் இன்று 15வது நாள் வரை நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முடக்கி வருகின்றனர்.

இந்நிலையில் பெகாசஸ் விவகாரம் தொடர்பாக தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டு வந்ததால், மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. அதில் பெகாசஸ் உளவு மென்பொருள்களை செயல்படுத்தும் இஸ்ரேலில் உள்ள NSO நிறுவனத்துடன் எந்த வர்த்தகமும் நடைபெறவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

Categories

Tech |