இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. என்ற தொழில்நுட்ப நிறுவனத்தின் பெகாஸஸ் மென்பொருள் மூலம் இந்தியாவில் மட்டும் பத்திரிகையாளர்களின் செல்போன்கள் உட்பட 300 தொலைப்பேசிகள் உளவு பார்க்கப்பட்டதாக வெளியான செய்திகள் நாடளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு பெகாசஸ் விவகாரம் நாடாளுமன்றத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், பிரதமர் மோடி அரசு மறைப்பதற்கு எதுவும் இல்லை எனில் இஸ்ரேல் பிரதமருக்கு உடனடியாக கடிதம் எழுதவேண்டும். இந்திய அரசு பணம் கொடுக்கவில்லை எனில் வேறு யார் பணம் கொடுத்து இந்தியர்களை உளவு பார்க்கச் சொன்னது என்று கண்டறியப் பட வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.