பெங்களூருவில் கனமழை காரணமாக சரிந்து விழும் நிலையில் இருந்த 4 மாடி கட்டிடம் இடிக்கப்பட்டுள்ளது.
பெங்களூருவில் உள்ள கமலா நகரில் பழமையான 4 மாடி கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடம் கனமழை மற்றும் பலமற்ற அஸ்திவாரம் காரணமாக இடிந்து விழும் நிலையில் இருந்து வந்தது. இதையடுத்து அங்கு வசித்து வந்த இரண்டு குடும்பத்தினர் ஏற்கனவே வெளியேறிவிட்டனர். இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக நேற்று அந்த கட்டிடத்தில் இருந்த மீதி ஆறு குடும்பத்தினரும் வெளியேறினர். மேலும் அந்த கட்டிடத்தின் அருகில் வசித்தவர்கள் முன்னெச்சரிக்கையாக அப்புறப்படுத்தப்பட்டனர்
இந்நிலையில் கட்டிடம் லேசாக சரிய தொடங்கியது. இதனை தொடர்ந்து அங்கு வந்த அதிகாரிகள் கட்டிடத்தை இடித்து தரைமட்டமாக்கினர். பலமற்ற அஸ்திவாரம் மற்றும் தொடர்மழை கட்டிடத்தின் சரிவிற்கு காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். பெங்களுருவில் அடுக்குமாடி கட்டிடங்கள் இடிந்து விழுவது தொடர் கதையாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.