பெங்களுருவில் 24 மணி நேரமும், உணவங்களை திறப்பதற்கு அனுமதி அளிப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
பெங்களூருவில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. மேலும் 1.30 கோடி பேர் வசித்து வருகின்றனர். அந்த நிறுவனங்களில் சில நிறுவனங்கள் பகல் மற்றும் இரவு என 24 மணி நேரமும் செயல்படுகின்றது. ஊழியர்கள் சிப்ட் கணக்கில் வேலை செய்து வருகிறார்கள். அப்படி ஊழியர்கள் இரவில் வீட்டில் இருந்து நிறுவனங்களுக்கு பணிக்குச் செல்வதும், பணி முடிந்து வீட்டுக்குத் திரும்புவதும் இருக்கும்.
பெங்களூருவில் தற்போது 12 மணி வரை மட்டுமே உணவகங்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் இரவு வீடு திரும்பும் ஊழியர்கள் நலனுக்காக மீண்டும் இரவு முழுவதும் உணவகங்களை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதனால் மாநகர எல்லைக்குள் இருக்கும் உணவகங்கள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி அளிக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இது குறித்த உத்தரவு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.