Categories
தேசிய செய்திகள்

பெங்களூருவில் 5 மாடி கட்டிடம் இடிந்து விபத்து…. கிரேட் எஸ்கேபான குடியிருப்பு வாசிகள்….!!

பெங்களூருவில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. நல்ல வேளையாக வீட்டில் இருந்தவர்கள் முன்கூட்டியே வெளியேறியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

பெங்களூரு கஸ்தூரி நகர் அருகே உள்ள டாக்டர்ஸ் லே-அவுட் இரண்டாவது கிராசின்கில் தரை தளத்துடன் கூடிய 5 மாடி கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடம் ஆயிஷா பெய்க் என்பவருக்கு சொந்தமானதாகும். இந்த கட்டிடத்தில் மொத்தம் எட்டு வீடுகள் உள்ளன. இதில் மூன்று வீடுகளில் மட்டும் குடியிருப்புவாசிகள் வசித்து வந்தனர். மீதமுள்ள 5 வீடுகள் காலியாக இருந்தன.

இந்த நிலையில் ஐந்து மாடி கட்டிடத்தின் ஒரு பகுதி நேற்று காலை திடீரென சரிய தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடியிருப்புவாசிகள் வீட்டை விட்டு வெளியேறி காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அப்பகுதி வழியாக பொதுமக்கள் செல்வதற்கு தடை விதித்தனர். நேரம் செல்ல செல்ல கட்டிடம் இடிந்து அருகில் இருந்த கட்டிடத்தின் மேல் சரிய தொடங்கியது. நல்லவேளையாக குடியிருப்புவாசிகள் முன்கூட்டியே வெளியேறியதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

இது குறித்து மாநகராட்சி தலைமை கூறுகையில்,” பெங்களூரு கஸ்தூரி நகரில் கடந்த 2012ஆம் ஆண்டு இரண்டு மாடி வீடு கட்டுவதற்கு அனுமதி பெற்ற உரிமையாளர் விதிமுறையை மீறி 5 மாடி கட்டியுள்ளார். ஆனால் மாநகராட்சி இடமிருந்து என்ஓசி பெறவில்லை. விதிமுறையை மீறி கூடுதலாக 3 மாடி கட்டிடம் கட்டியிருந்ததால் கட்டிடம் சாய்ந்துள்ளது. மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய உரிமையாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். இந்நிலையில் பெங்களூருவில் கட்டிடங்கள் இடிந்து வருவது தொடர்கதையாகியுள்ளது. இந்த சம்பவம் மக்களை பெரும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.

Categories

Tech |