பெங்களூரு உட்பட மாநிலம் முழுதும் பெய்துவரும் மழை-வெள்ளம் குறித்து நடிகை ரம்யா என்கிற திவ்யா ஸ்பந்தனா தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் “கர்நாடகாவில் எத்தனை எம்எல்ஏ-க்கள் மற்றும் எம்பி-க்கள் ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா?… அதாவது 26 பேர் ரியல் எஸ்டேட்டில் ஈடுபட்டுள்ளனர் என் சொல்கிறார்கள். அது திகைப்பூட்டும் எண்ணிக்கை ஆகும். ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ள இந்த 26 எம்எல்ஏ-க்களும் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள்தான். நீங்கள் தான் ரியல் எஸ்டேட் அதிபர்களை எம்எல்ஏ-வாக தேர்வு செய்துள்ளீர்கள்.
A good place to start @CMofKarnataka all the big builders should be taken to task- how did they get to violate and who approved their building plan and gave them the completion certificate? Wonder who the urban development minister was when this building came up- https://t.co/9AOhLWkwti
— Ramya/Divya Spandana (@divyaspandana) September 6, 2022
ஆகவே தயவு செய்து வாக்களிக்கும் முன் யோசித்து புத்திசாலிதனமாக செயல்படுங்கள். ஏராளமான மக்கள் குறிப்பாக நகர்ப்புற மக்கள் தேர்தலில் வாக்களிப்பது இல்லை. இதன் காரணமாக கோபம் வருகிறது. தற்போது நம் நிலைமைக்கு நாம் அனைவருமே காரணம். அரசியல் கட்சிகள் பணம் இருப்பவர்களுக்கு மட்டும் (பெரும்பாலும் ரியல் எஸ்டேட்) போட்டியிட டிக்கெட் கொடுக்கப்படுவது எதற்காக?. ஒரு எம்எல்ஏ வேட்பாளருக்கு தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ள செலவு ரூபாய் .40 லட்சம். எனினும் தேர்தல் சமயத்தில் அவர்கள் கோடிக் கணக்கில் செலவிடுகிறார்கள். இது ஏன் என யோசித்தால், அதிலேயே பதில் இருக்கிறது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.