பெங்களூரு பயங்கரவாதிகளின் மையமாக திகழ்கிறது என்று கூறியுள்ள பாரதிய ஜனதா கட்சி எம்.பி கருத்துக்கு கர்நாடக காங்கிரஸ் தலைவர் பதிலடி கொடுத்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியை சார்ந்த தேஜஸ்வி சூர்யா கடந்த சில தினங்களுக்கு முன்னர் பயங்கரவாதிகளின் மையமாக பெங்களூரு திகழ்ந்து கொண்டிருக்கிறது என கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு எதிராக கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “தேஜஸ்வினி சூர்யா பெங்களூரு பயங்கரவாதிகளின் மையமாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது என கூறியிருக்கிறார்.
தற்போது மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் நாட்டின் வளர்ச்சியில் பெரும் சரிவை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இது போன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறினால் முதலீட்டார்கள் எப்படி கர்நாடகம் வர விரும்புவார்கள். இதற்கு பிரதமர் மற்றும் நிதி மந்திரி கட்டாயம் பதில் கூற வேண்டும்”என்று அவர் பதிவிட்டுள்ளார்.