Categories
தேசிய செய்திகள்

பெங்களூர் அருகே பிரபல ரவுடி வெட்டிக் கொலை… மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு….!!!

பெங்களூரு அருகே பிரபல ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்குள்ள மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளதது.

பெங்களூர் புறநகர் மாவட்டம் தியாமகொண்டலுவை சேர்ந்தவர் பிரபல ரவுடி ஜெய் ஸ்ரீ ராம். இவர் தனது நண்பர் சதீஷ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். இவர்கள் இருவரும் இந்திரா நகர் மெயின் ரோட்டில் சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி ஜெய் ஸ்ரீ ராம் கீழே விழுந்தார் . இந்நிலையில் காரிலிருந்து இறங்கிய மர்ம நபர்கள் சிலர் அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள் போன்ற ஆயுதங்களால் ஜெய்ஸ்ரீ ராமை சரமாரியாக வெட்டினர்.

இதில் பலத்த காயமடைந்த ஜெய்ஸ்ரீராம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து மர்ம நபர்கள் காரில் ஏறி உடனடியாக தப்பி சென்று விட்டனர். ஜெய் ஸ்ரீராமின் நண்பர் சதீஷும் கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்து இருந்தார். இந்த தகவல் அறிந்த போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு வந்து ஜெய் ஸ்ரீ ராமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜெய்ஸ்ரீராம் ரவுடி என்பதால் முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |