Categories
மாநில செய்திகள்

பெங்களூர்- ஓசூர் இடையே மெட்ரோ ரயில் சேவை… கர்நாடக முதல்வரிடம் கோரிக்கை…!!!!

பொம்ம சந்திரா வரை செயல்படுத்தப்படும் மெட்ரோ ரயில் திட்டத்தை அத்திப்பள்ளி அத்திப்பள்ளி வழியாக ஓசூர் வரை  நீட்டிக்க வேண்டும் செல்லக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் முன்னாள் முதல்வரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சித்தராமையாவை கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செல்லக்குமார் சந்தித்து பேசியுள்ளார். அப்போது பெங்களூருவில் இருந்து பொம்மசந்திரா வரை செயல்படுத்தப்படும் மெட்ரோ ரயில் திட்டத்தை அத்திப்பள்ளி வழியாக ஓசூர் வரை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறார்.

அதனை தொடர்ந்து சித்தராமையா உடன் சென்று முதலமைச்சர் பசவராஜ் பொம்மையை சந்தித்த எம்பி செல்வகுமார் அவரிடம், மெட்ரோ ரயில் திட்டத்தை ஓசூர் வரை நீடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி எடுத்துக் கூறியுள்ளார். இதுபற்றி எம்.பி.செல்லக்குமாரின்  கோரிக்கை மனுவில் கூறப்பட்டிருப்பதாவது,” கர்நாடக தலைநகர் பெங்களூர் இருக்கும் தமிழகத்தின் நுழைவாயிலாக ஓசூர் இருக்கிறது.

ஓசூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு ஏராளமான வளர்ச்சித் திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நூற்றுக்கணக்கான கனரக தொழில் நிறுவனங்கள், மூவாயிரத்திற்கும் மேற்பட்ட சிறு தொழில் நிறுவனங்கள் என ஓசூர் அதிவேகமாக வளர்ச்சி பெற்று வருகிறது. இந்நிலையில் இரு மாநிலங்களில் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவதோடு போக்குவரத்து நெரிசலும் குறையும் ஓசூரில் செயல்பட்டு வரும் பெரும்பாலான தொழில் நிறுவனங்களின் அலுவலகங்கள் தொழிலகங்கள் பெங்களூருவில் இருக்கின்றது.

மேலும் ஓசூரில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், ஊழியர்கள் பெங்களூரு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வருகின்றனர். அதனால் எலக்ட்ரானிக் சிட்டி, பொம்ம சந்திரா, தொழில்பேட்டை, சில்க் போர்டு, அத்திப்பள்ளியில் உள்ள நிறுவனங்களில் பணியாற்றும் ஏராளமான ஊழியர்கள் தொழிலாளர்கள் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு ஓசூரில் தங்கியிருக்கிறார்கள். அதனால் பொம்மசந்திரா வரை செயல்படுத்தப்படும் மெட்ரோ ரயில் சேவையை 20 கிலோமீட்டர் நீட்டித்து ஓசூர் வரை செயல்படுத்த வேண்டும்.

இதனால் இரு மாநில மக்களும் பயன்பெறுவார்கள்” என அதில் கூறப்பட்டுள்ளது. இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்பி செல்வகுமார் பெங்களூரு ஓசூர் இடையேயான மெட்ரோ ரயில் சேவை குறித்து விரைவில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து பேசியிருக்கிறேன் என கூறியுள்ளார்.

Categories

Tech |