Categories
தேசிய செய்திகள்

பெங்களூர் நகரில் முதன் முறையாக…. நாளை முதல் தமிழ் புத்தக திருவிழா தொடக்கம்….!!!!

பெங்களூர் நகரில் முதன் முறையாக தமிழ் புத்தக திருவிழாவானது நாளை(டிச..25) தொடங்கி ஜன,.1 ஆம் தேதி வரை 8 நாட்கள் நடைபெற உள்ளது. தி.மு.க தலைமயிலான ஆட்சியமைந்த பின் புத்தக கண்காட்சிகள் அதிக எண்ணிக்கையில் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக கர்நாடகா வாழ் தமிழக வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் பெங்களூர் நகரில் முதன் முறையாக தமிழ் புத்தக கண்காட்சி நடத்தப்பட உள்ளது.

இதை நாளை மாலை 3 மணியளவில் இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில் சுவாமி அண்ணாதுரை துவக்கிவைக்க இருக்கிறார். இந்த கண்காட்சி அல்சுர் பகுதியில் உள்ள தமிழ் சங்க வளாகத்தில் நடைபெற உள்ளது. கர்நாடகா தமிழ் பள்ளி-கல்லூரி ஆசிரியர்கள் சங்கமும், தமிழ் பத்திரிகையாளர்கள் சங்கமும் இணைந்து இந்த புத்தககண்காட்சியை நடத்துகின்றனர். கண்காட்சியில் அனைத்து நூல்களுக்கும் 10 சதவீத தள்ளுபடி வழங்கபடவுள்ளது. மேலும் மாணவர்களுக்கு ரூ.100 மதிப்புள்ள புத்தக அன்பளிப்பு சீட்டும் வழங்கபட உள்ளது.

Categories

Tech |