Categories
தேசிய செய்திகள்

பெங்களூர்-புதுச்சேரி போக்குவரத்து சேவை… நாளை முதல் இயங்கும்… கர்நாடக அரசு அறிவிப்பு…!!!

பெங்களூருவில் இருந்து புதுச்சேரிக்கு நாளை முதல் அரசு பேருந்துகள் அனைத்தும் இயக்கப்பட உள்ளதாக கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

கர்நாடகா மாநிலத்திலிருந்து அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் மராட்டிய ஆகிய மாநிலங்களுக்கு கர்நாடக அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பாக தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 7 மாதங்களுக்கு மேலாக அனைத்து அரசு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளன. தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதால் அனைத்து போக்குவரத்து சேவைகளும் தற்போது தொடங்கியுள்ளன.

இந்நிலையில் கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் சார்பாக கர்நாடக மாநிலத்தில் இருந்து மற்ற வெளிமாநிலங்களுக்கு அரசு பேருந்துகள் மீண்டும் இயக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக கர்நாடகாவில் இருந்து பேருந்துகள் எதுவும் இயக்கப்படவில்லை. இதனையடுத்து புதுச்சேரிக்கு அரசு பேருந்துகளை இயக்குவதற்கு கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் முடிவு எடுத்துள்ளது.

இது பற்றி கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்தியில், ” கொரோனா பாதிப்பு காரணமாக கர்நாடகாவில் இருந்து புதுச்சேரிக்கு வரக்கூடிய அரசு பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. தற்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து புதுச்சேரிக்கு பேருந்து சேவை நாளை முதல் இயக்கப்பட உள்ளது. அதன்படி நாளை முதல் பெங்களூருவில் இருந்து புதுச்சேரிக்கு அரசு பேருந்துகள் அனைத்தும் இயக்கப்படும்.

ஆனால் பேருந்துகளில் பயணம் செய்யும் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும். மேலும் பயணம் செய்பவர்கள் www.ksrtc.in என்ற இணையதள முகவரியில் பேருந்து பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |