பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக அவிஷேக் டால்மியா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவராக இருந்தவர் சவுரவ் கங்குலி. பிசிசிஐ தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கங்குலி, போட்டியின்றி ஒருமனதாக பிசிசிஐ தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதனால் பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் இரண்டு முறை தலைவராக இருந்த மறைந்த முன்னாள் பிசிசிஐ தலைவரான ஜக்மோகன் டால்மியாவின் மகன் அவிஷேக் டால்மியா, தற்போது புதிய பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவருடைய பதவிக்காலம் 2021 நவம்பர் 6-ஆம் தேதி வரை இருக்கிறது. அவிஷேக் டால்மியா பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் 18-வது தலைவராவார். அதே போல், பெங்கால் கிரிக்கெட் சங்க செயலாளராக ஸ்னேஹாஷிஷ் கங்குலி தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.