சிவகங்கை மாவட்டம் கல்லல் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதை தடுக்க ரோந்து பணியில் ஈடுபடுமாறு காவல் துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட சில கிராமங்களில் உள்ள பெட்டிக்கடைகளில் படுஜோராக மது பாட்டில்கள் விற்பனை செய்யபட்டு வருகிறது. காலை 12 மணி முதல் இரவு 10 மணி வரை மதுபான கடைகள் செயல்படுகின்றது. எந்த நேரத்திலும் கிடைக்கும் வகையில் சில கிராமங்களில் மது பாட்டில்கள் பெட்டிக்கடைகளில் வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் வேலைக்குச் செல்லும் ஆண்கள் தினந்தோறும் காலை வேளையில் மது அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் ஊரை சுற்றுவதாக பெண்கள் புலம்புகின்றனர்.
வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் பகல் 12 மணிக்கு மேல் மதுபான கடைகள் திறந்து இருப்பதினால் வேலைக்கு சென்று விட்டு திரும்பும் போது மதுபான கடைக்கு சென்று வருவார்கள். மதுக்கடைகள் தேர்தல் நேரத்தில் மூடப்பட்டுள்ளதால் அதிக அளவு மது பாட்டில்கள் பெட்டிக் கடைகளில் விற்கப்படுகிறது. எனவே காவல்துறையினர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதை தடுக்க கிராமங்களில் ரோந்து பணியில் ஈடுபட முன்வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.