Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பெட்டிக்கடையில் பதுக்கி வைத்திருந்த 10 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்… உரிமையாளருக்கு ரூ 5,000 அபராதம் விதித்த அதிகாரிகள்…!!!

ஒரு பெட்டிக் கடையில் 10 கிலோ புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி நகரில் இருக்கின்ற ஒரு சில பெட்டிக்கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா, ஹான்ஸ் போன்ற புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக கள்ளக்குறிச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு தகவல் வந்துள்ளது. இத்தகவலின் அடிப்படையில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சுகந்தன், உணவு பாதுகாப்பு அலுவலர் கதிரவன் ஆகியோர் தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கள்ளக்குறிச்சி நகரப் பகுதியில் இருக்கின்ற பெட்டிக்கடையில் திடீரென சோதனை மேற்கொண்டனர்.

அப்போது கள்ளக்குறிச்சி – கச்சிராயப்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு பெட்டி கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மறைத்து வைத்து விற்கப்பட்டதை கண்டுபிடித்தனர். இதனை அடுத்து கடையில் மறைத்து வைத்திருந்த 10 கிலோ புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்து, அந்த கடை உரிமையாளருக்கு ரூ 5,000 அபராதம் விதித்தார்கள்.

இதேபோன்று பெட்டிக்கடை அருகில் ஒரு பழக்கடையில் சோதனை செய்தபோது, அங்கு ரசாயனக் கற்கள் வைத்து மாம்பழங்களை பழுக்க வைத்ததை கண்டுபிடித்தனர். இதனையடுத்து அதிகாரிகள் ரசாயனக் கற்கள் மூலம் பழுக்க வைத்த 20 கிலோ மாம்பழங்களை பறிமுதல் செய்து அழித்துள்ளனர். மேலும் பழக்கடை உரிமையாளரிடம் இயற்கை முறையில் பழங்களை பழுக்க வைத்து விற்க வேண்டும் என்று எச்சரித்து விட்டு சென்றனர்.

Categories

Tech |