Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பெட்டிக் கடை உரிமையாளரை காவு வாங்கிய கொரோனா…. அரசு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை…. திருநெல்வேலியில் கோரத் தாண்டவம்….!!

திருநெல்வேலியில் கொரோனாவால் பெட்டி கடை உரிமையாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் 59 வயதாகின்ற நபர் பெட்டிக் கடை ஒன்றை நடத்திவந்தார். இந்நிலையில் இவருக்கு சில நாட்களாகவே உடல்நலக் குறைபாடு ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று உறுதியானது. இதனைத் தொடர்ந்து அவரை வீட்டிலேயே தனிமைப்படுத்தி, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் திடீரென அவர் உயிரிழந்தார். இதனால் பேரூராட்சி நிர்வாகத்தின் அதிகாரியான சுஷ்மா மற்றும் சில முக்கிய அதிகாரிகள் அப்பகுதியில் கிருமி நாசினியை தெளித்து சுகாதார நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். மேலும் களக்காட்டில் 17 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது.

Categories

Tech |