உள்ளாட்சித் தேர்தலில் திமுகவினர் பெட்டிகளை மாற்றி ஏமாற்றி விடுவார்கள். எனவே அதிமுக தொண்டர்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 9 மாவட்டங்களில் அக்டோபர் 6, 9 தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற உள்ள நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் எதிர்க்கட்சித் தலைவர் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான பழனிச்சாமி ஆலோசனை நடத்தியபோது, “திமுகவினர் தேர்தலில் பெட்டியை மாற்றி ஏமாற்றி விடுவார்கள் என்பதால், அதிமுக தொண்டர்கள் அனைவரும் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இல்லையேல் நம்மை தோற்கடித்து விடுவார்கள்.
ஸ்டாலின் தேர்தலில் பெண்கள், மாணவர்கள் உள்ளிட்டோருக்கு நிறைய வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றம் செய்துவிட்டார். முதலமைச்சர் தேர்தலுக்கு முன் வாக்குறுதிகளை உடனேயே நிறைவேற்றுவோம் என கூறியவர், தற்பொழுது 5 ஆண்டுகளுக்குள் செய்து விடுவோம் என்று கூறி வருகிறார். தேர்தலில் அதிமுகவினர் அனைவரும் இரவு பகல் பாராமல் கடுமையாக உழைக்க வேண்டும். என்று பேசினார்.