கணவரின் கொடுமை தாங்க முடியாமல் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
கேரள மாநிலம் சுருளங்கோடு பகுதியில் ஸ்ருதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெங்களூரில் இருக்கும் ஒரு பத்திரிகை நிறுவனத்தில் சீனியர் உதவி ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு ஸ்ருதிக்கும்-அனிஸ் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர் திருமணமான நாளில் இருந்து படுக்கை அறையில் கேமரா வைப்பது, வாய்ஸ் ரெக்கார்ட் பண்ணுவது போன்ற கொடூரமான செயல்களில் ஈடுபட்டுள்ளார். இவர் சுருதியை 2 முறை கொலை செய்யவும் முயற்சி செய்துள்ளார். இதனால் சுருதி மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார்.
இந்நிலையில் ஸ்ருதிக்கு அவருடைய தாயார் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் பலமுறை போன் செய்தும் ஸ்ருதி எடுக்கவில்லை. இதனால் பயந்துபோன ஸ்ருதியின் தாயார் அவர் வசிக்கும் குடியிருப்பில் காவலாளிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது மகளை பார்க்குமாறு கூறியுள்ளார். இதனையடுத்து காவலாளி ஸ்ருதியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.அப்போது வீடு உள்பக்கமாக பூட்டி இருந்தது. இதனையடுத்து காவலாளி பால்கனி வழியாக கதவை உடைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது ஸ்ருதி பிணமாக தொங்கியுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த காவலாளி ஸ்ருதியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சுருதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பிறகு காவல்துறையினர் சுருதியின் வீட்டில் சோதனை செய்தனர். அந்த சோதனையில் 3 கடிதம் கிடைத்தது. அதில் கணவருக்கு, பெற்றோருக்கு மற்றும் காவல்துறையினருக்கு என 3 கடிதங்கள் எழுதப்பட்டிருந்தது. இதில் கணவருக்கு எழுதிய கடிதத்தில் உன்னுடன் 20 நிமிடத்திற்கு மேல் எந்த பெண்ணாலும் வாழ முடியாது. நீ மீண்டும் திருமணம் செய்ய கொள்ள விரும்பினால் காது கேட்காத, கண் பார்வை இழந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள். அவரால் மட்டுமே உன்னால் வாழ்க்கை நடத்த முடியும் என்று எழுதப்பட்டிருந்தது.
இதனையடுத்து பெற்றோருக்கு எழுதிய கடிதத்தில் நான் உங்களுக்காக வாழ்ந்தால் என்னை நினைத்து நீங்கள் வேதனைதான் பட வேண்டியிருக்கும். ஆனால் நான் இறந்துவிட்டால் ஓரிரு நாள் துக்கத்துடன் என்னை மறந்து விடுவீர்கள் என்று எழுதியிருந்தது. இதனையடுத்து காவல்துறையினர் சகோதரர் நிஷாந்த் கொடுத்த புகாரின்படி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஸ்ருதியின் நண்பர்கள் மற்றும் அவருடன் பணிபுரியும் ஊழியர்கள் ஸ்ருதி மிகவும் தைரியமான மற்றும் துணிச்சலான பெண்மணி ஆகும். இவர் யாருடைய உதவியையும் எதிர்பார்க்க மாட்டார். இதற்காகவே கணவர் சைக்கோ என்று தெரிந்திருந்தும் யாரிடமும் உதவி கேட்க கூடாது என தற்கொலை செய்துள்ளனர் எனக்கூறி வருத்தப்பட்டனர்.