Categories
உலக செய்திகள்

“பெட்ரூமில் சிதறி கிடந்த தலை முடி” நள்ளிரவில் மாயமான சிறுமி…. அச்சத்தில் பெற்றோர்…!!

சிறுமி ஒருவர் நள்ளிரவில் படுக்கையறையிலிருந்து காணாமல் போன சம்பவம் பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கலிபோர்னியாவில் உள்ள லோமா லிண்டா பகுதியில் வசிப்பவர் Tuva Littu(11). இவர் திடீரென்று நள்ளிரவு ஒரு மணிக்கு படுக்கையில் இருந்து வெளியில் சென்றுள்ளார். இந்நிலையில் அவருடைய படுக்கை அறையில் தலைமுடி வெட்டப்பட்டு ஆங்காங்கே சிதறிக் கிடந்துள்ளது. அவருடைய தலை முடி நீளமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து இது குறித்து காவல்துறையினர் சிறுமியின் படுக்கையறையில் சோதனை நடத்தியுள்ளனர்.

அப்போது அங்கிருந்த கடிதத்தில் தன் விருப்பத்தின் பேரில் தான் செல்கிறேன் என்று எழுதப்பட்டு இருந்துள்ளது. ஆனால் அந்த கடிதத்தில் எழுதி இருப்பது தன் மகளின் கையெழுத்து இல்லை என்றும், இவர் வீட்டை விட்டு ஓடும்  பெண் கிடையாது என்றும் அவருடைய கூறியுள்ளனர். இந்நிலையில் சிறுமி நிலை என்ன? என்பது குறித்து குடும்பத்தாரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சிறுமி குறித்து யாருக்கேனும் தகவல் தெரிந்தால் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |