அமெரிக்காவில் நாள் ஒன்றுக்கு ஒரு மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் சேமிப்பு கிடங்குகளில் இருந்து எடுத்து சந்தைகளுக்கு அனுப்ப அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷ்யா உக்ரைன் போர் காரணமாகவும் உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஏற்றம் காரணமாகவும் அடுத்த 6 மாத காலங்களுக்கு அமெரிக்காவில் பெட்ரோலிய பொருட்களின் தட்டுப்பாட்டை தவிர்ப்பதற்காக ஜோ பைடன் இந்த முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்க வரலாற்றில் எந்த அதிபரும் இதுபோன்று முடிவு எடுக்கவில்லை எனவும், இந்த முடிவால் அமெரிக்காவில் பெட்ரோலிய பொருட்களின் விலை குறைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
Categories