தக்காளி விலை கிலோ 100 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். குறிப்பாக உத்தர பிரதேசத்தில் ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. தலைநகர் டெல்லியில் தக்காளி விலை கிலோவுக்கு 60 முதல் 80 ரூபாயாக விற்பனையாகி வருகிறது. உத்திரப்பிரதேசத்தின் பல நகரங்களில் தக்காளி 100 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. தக்காளியின் வரத்து குறைவால் இப்படி விலை உயர்ந்து வருவதாக தெரிவிக்கின்றனர்.
இந்த ஆண்டு வெப்ப அலை மிகக் கடுமையாக இருந்ததால் தக்காளி, கோதுமை உள்ளிட்ட பல்வேறு பயிர்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தக்காளி வரத்து குறைந்து காய்கறி சந்தைகளில் தக்காளிக்கு டிமாண்ட் அதிகமாக உள்ளதால் விலை பயங்கரமாக உயர்ந்துள்ளது. இதன் விளைவாக தக்காளி சுமார் 80 முதல் 100 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது. தக்காளியை தவிர வேறு சில காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது. வரும் நாட்களில் காய்கறி வரத்து சீரானதும் விலை குறையும் என கூறுகின்றனர் விவசாயிகள். அதுமட்டுமில்லாமல் எலுமிச்சைபழம் கிலோ 200 முதல் 250 வரை விற்பனையாகி வருகின்றது.