பெட்ரோல் டீசல் விலையை தொடர்ந்து பல பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதும் பணவீக்கம் மிகக் கடுமையாக உயர்ந்து கொண்டிருக்கிறது. பல்வேறு பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். உக்ரைன் ,ரஷ்யா போர் தொடங்கிய பின்பு கச்சா எண்ணெயின் விலை உயர்ந்துள்ளது. இந்தியாவில் நேற்று முதல் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது.
இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து இருக்கிறது. மேலும் இது மட்டுமல்லாமல் கேஸ் சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நடவடிக்கை பொதுமக்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது. எனினும் பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை மட்டுமல்லாமல் இன்னும் பல்வேறு பொருட்களின் விலை சமீபத்தில் உயர்ந்திருக்கிறது.
பால்:
பால் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதாக மதர் டைரி, பராக், அமுல் ஆகிய நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
சிஎன்ஜி:
வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் சிஎன்ஜி கேஸ் விலையும் டெல்லியில் உயர்த்தப்பட்டுள்ளது.
நுகர்பொருட்கள்:
சாதாரண டீ, காபி, மளிகைப் பொருட்களின் விலையை ஹிந்துஸ்தான் யூனிலீவர், நெஸ்லே உள்ளிட்ட FMCG நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.
தீப்பெட்டி விலை:
மூலப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் தீப்பெட்டி பண்டல்களின் விலை 300 ரூபாயில் இருந்து 350 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.