Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பெட்ரோல் ஊற்றி எரித்த பெண்…. காதல் கணவருக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் விசாரணை…!!

இளம்பெண் தனது கணவரை எரித்து கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் சிப்காட் பகுதியில் கார்த்திக்(29) என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டுமான பொருட்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கார்த்திக் சந்தியா (27) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கிறான். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த சந்தியா கடந்த 5-ஆம் தேதி கார்த்திக் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார்.

இதனையடுத்து படுகாயமடைந்த கார்த்திக்கை அருகில் உள்ளவர்கள் மீட்டு பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் தீக்காயம் ஏற்பட்ட சந்தியாவும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து கார்த்திக் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் சந்தியா மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |