Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பெட்ரோல் ஊற்றி தீ வைத்த வழக்கு…. விசாரணையில் தெரிந்த உண்மை…. ரவுடியின் தம்பி உள்பட இருவர் கைது…!!

அதிகாரி வீட்டில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த வழக்கில் 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

கடலூர் மத்திய சிறையில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் உதவி சிறை அலுவலராக வேலை பார்த்து வருகிறார்.இவர் மத்திய சிறை அருகே இருக்கும் உதவி சிறை அலுவலர்களுக்கான குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 24-ஆம் தேதி மணிகண்டன் சொந்த வேலை காரணமாக கும்பகோணம் சென்று விட்டார். கடந்த 28-ஆம் தேதி அதிகாலை மர்ம நபர்கள் மணிகண்டனின் வீட்டு ஜன்னல் வழியே பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இந்த சம்பவத்தில் மணிகண்டனின் குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் கடலூர் மத்திய சிறை காவலராக வேலை பார்த்த சேலம் மாவட்டத்தை சேர்ந்த செந்தில்குமார்(44) என்பவர் முன்விரோதம் காரணமாக பெற்றோரை ஊற்றி தீ வைத்தது தெரியவந்தது. அவர் சிறையில் இருக்கும் பிரபல ரவுடியான தனசேகர் உள்பட 8 பேருடன் சேர்ந்து பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். இதனை அடுத்து செந்தில்குமார் மற்றும் தினேஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். நேற்று அதிகாலை தனசேகரின் தம்பி மதிவாணன், அவரது நண்பர் மௌலிதரன் ஆகிய இரண்டு பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் 4 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்

Categories

Tech |