Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பெட்ரோல் குண்டு வீசி சென்ற கும்பல்…. நொடியில் உயிர் தப்பிய போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!

காவல்துறையினர் மீது பெட்ரோல் குண்டு வீசி சென்ற 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரியக்குப்பத்தில் தனியாருக்கு சொந்தமான செயல்படாத எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைந்துள்ளது. இங்கு பெரிய இரும்பு தளவாட பொருட்கள் மற்றும் தாமிரக் கம்பிகள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் ஆலைக்குள் புகுந்தனர். அதன்பின் மர்ம நபர்கள் அங்கிருந்த இரும்பு குழாய் மற்றும் தாமிரக் கம்பி உள்ளிட்ட பொருட்களை திருடி கொண்டிருந்தனர்.

இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் கொள்ளையர்களை பிடிக்க முயற்சி செய்த போது அவர்கள் 5 பெட்ரோல் குண்டுகளை காவல்துறையினர் மீது அடுத்தடுத்து வீசிவிட்டு 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்களை திருடி சென்றனர். இதில் அதிர்ஷ்டவசமாக காவல்துறையினர் காயமின்றி உயிர் தப்பினர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 50 கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்த வழக்கில் ஜெகதீசன், விஜய், பிரபாகரன், நற்குணம் ஆகிய 4 பேரையும் காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். மற்ற கொள்ளையர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |