Categories
தேசிய செய்திகள்

பெட்ரோல், கேஸ் விலையை அடுத்து அதிரடி கட்டண உயர்வு… அரசு அதிர்ச்சி அறிவிப்பு…!!!

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் கேஸ் விலையை தொடர்ந்து ரயில்களில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்துவது மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை மீண்டும் இயக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் குறைந்த அளவிலான பேருந்துகள் மற்றும் ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.

இதற்கு மத்தியில் கொரோனா ஊரடங்கு தளர்வு களுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் பொதுமக்கள் அனைவரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் கொறடா காரணமாக முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளின் கட்டணத்தையும், குறுகிய தூரம் செல்லும் ரயில்களில் டிக்கெட் கட்டணத்தையும் உயர்த்துவதாக மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று தீவிரமாக பரவும் இச்சூழலில் தேவையற்ற பயணங்களை தவிர்க்கவே இந்த தற்காலிக கட்டண உயர்வு என்றும் தெரிவித்துள்ளது. அதன்படி 25 ரூபாய் டிக்கெட் கட்டணம் தற்போது 55 ரூபாய் ஆகவும், 35 ரூபாய் கட்டணம் தற்போது 60 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ரயில் பயணிகள் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Categories

Tech |