தமிழகத்தில் பெட்ரோல், டீசல்,எரிவாயு சிலிண்டர், விலையானது தொடர்ந்து உயர்ந்து கொண்டு வருவதால் மக்களுக்கு அரசு மீது உள்ள நம்பிக்கையை சீர்குலைத்து விடும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.
இதனையடுத்து திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது, பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர், விலையால் மக்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை. மேலும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக வேளாண் சட்டங்கள் இருப்பதாகவும், அதுபற்றி பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் நேரில் விவாதிக்க தயார் என்றும் அவர் கூறியுள்ளார்.