ஒவ்வொரு மாதமும் வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த மாதம் அது குறித்த அறிவிப்பு எதுவும் வெளிவராமல் இருந்த நிலையில், தற்போது வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 50 ரூபாய் உயர்ந்துள்ளது. 917 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் தற்போது 967 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சுமார் நான்கரை மாதங்களுக்கு பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்ததை தொடர்ந்து தற்போது வீட்டு உபயோக சிலிண்டர் விலையும் உயர்ந்துள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது.
Categories