நாடு முழுவதும் சுங்க கட்டணம் உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த சில நாட்களாக அதிகரித்து கொண்டே வருகிறது. இதனுடன் சேர்த்து சமையல் சிலிண்டர் எரிவாயு விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் சுங்கச்சாவடி கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளதால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு மற்றும் சுங்கச்சாவடி கட்டண உயர்வு ஆகியவற்றுக்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கச்சா எண்ணெய் விலை உயரும்போது எரிபொருள் விலையை உயர்த்துவது ஆர்வம் காட்டும் எண்ணெய் நிறுவனங்கள், விலையை குறைக்க ஒருபோதும் முனைப்பு காட்டுவதில்லை என்று கூறியுள்ளார். மேலும் எரிபொருள் விலை உயர்வை கட்டுப்படுத்தி சுங்கச்சாவடி கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டுமென்றும் ஒன்றிய அரசை வலியுறுத்தியுள்ளார்.