தமிழகத்தில் திருச்சி, ஸ்ரீரங்கம் மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்ட 27 ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் 50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக ரயில் நிலையங்களில் அதிக அளவில் பயணிகளை வழியனுப்ப வருவோர் கூடுவதை கட்டுப்படுத்துவதற்காக கட்டண உயர்வு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
திருச்சி ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட முக்கிய ரயில் நிலையங்களான பொன்மலை, பூதலூர், பாபநாசம், வைத்தீஸ்வரன் கோயில், சீர்காழி, சிதம்பரம், கடலூர் துறைமுகம் ஜங்ஷன், திருப்பாதிரிப்புலியூர், திருவண்ணாமலை, திருக்கோவிலூர், திருவாரூர், மன்னார்குடி, திருவெறும்பூர், நாகப்பட்டினம், நாகூர், வேளாங்கண்ணி, பட்டுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி நகரம், திருச்சிராப்பள்ளி கோட்டை, அரியலூர், லால்குடி, பெண்ணாடம், காரைக்கால், பண்ருட்டி, நீடாமங்களம் ஜங்ஷன், ஸ்ரீரங்கம் ஆகிய 27 ரயில்நிலையங்களில் மட்டும் நடைமேடைக் கட்டணம் ஒரு பயணிக்கு ரூ.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இக்கட்டணம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது