Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வு…. மாலை அணிவித்து ஆர்ப்பாட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்..!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பாக 5 இடங்களில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து போராட்டம் நடத்தினார்கள்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகில் முண்டியம்பாக்கம் கடைவீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக கண்டன போராட்டம் நடத்தப்பட்டது. கிளை செயலாளர் ஜெயச்சந்திரன் தலைமை தாங்கிய இந்த போராட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சங்கரன், ஒன்றிய செயலாளர் கிருஷ்ணராஜ், மாவட்ட குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, மாதர் சங்க மாவட்ட செயலாளர் சித்ரா ஆகியோர் கண்டனம் தெரிவித்து பேசினார்கள்.

மேலும் முன்னாள் ஒன்றிய செயலாளர் தண்டபாணி, இடை குழு உறுப்பினர்கள்  ரமேஷ், கலியமூர்த்தி சேகர், கிளை செயலாளர்கள்  பாலமுருகன், ஜெயா, உமாமகேஸ்வரி உட்பட பலர் பங்கேற்றனர். இந்த போராட்டத்தின் போது சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல், விலை உயர்வை எதிர்ப்பு தெரிவித்து சிலிண்டர், பெட்ரோல், டீசல் கேன்களுக்கு மாலை அணிவித்து முழக்கங்கள் எழுப்பினார்கள்.

இதைப் போன்று இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டமங்கலத்தில் ஒன்றிய செயலாளர் குப்புசாமி, கோட்டகுப்பத்தில் இடை குழு உறுப்பினர் முகமது அனாஸ், திருச்சிற்றம்பலம் கூட்டு சாலையில் வானூர் வட்ட செயலாளர் முருகன், கஞ்சனூரில் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணராஜ் ஆகியோர் தலைமையில் போராட்டம் நடத்தினார்கள்.

Categories

Tech |