Categories
தேசிய செய்திகள்

“பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை”….. மத்திய அரசு விளக்கம்….!!!!

தமிழகம் உள்ளிட்ட மாவட்டங்களில் பெட்ரோல். டீசலுக்கு தட்டுப்பாடு இருப்பதாக காலை முதல் செய்திகள் பரவி வருகிறது. அதாவது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், கடந்த 25 நாட்களாக பெட்ரோல் டீசல் விலை மாற்றம் இன்றி ஒரே விலையில் இருப்பதால் இழப்பை ஈடு செய்ய பெட்ரோல் பங்குகளுக்கு செய்யும் வினியோகத்தை குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் செயற்கையான பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்திருந்தது.

இந்நிலையில் இதற்கு விளக்கம் அளித்த மத்திய அரசு தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு இல்லை எனவும், தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பெட்ரோல் உற்பத்தி கூடுதலாக உள்ளது என்றும் விளக்கம் அளித்துள்ளது. போதிய அளவை விட கூடுதலாக பெட்ரோல், டீசல் உற்பத்தி செய்யப்படுவதாகவும், சில்லரை விற்பனை நிலையங்களில் தட்டுப்பாடின்றி வினியோகிக்க கூடுதல் டேங்கர் லாரிகள் இயக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |