பெட்ரோல் டீசல் மீதான செஸ் வரி கடந்த 4 ஆண்டுகளாக 20 கோடி ரூபாயை மத்திய அரசு வசூலித்துள்ளதாக திமுக டி.ஆர் பாலு குற்றம்சாட்டியுள்ளார். மக்களவையில் பூஜ்ஜிய நேரத்தில் பேசிய திமுக எம்.பி டி.ஆர் பாலு 2014ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிரதமர் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 50 சதவீதம் குறைக்கப்படும் என வாக்குறுதி அளித்த நிலையில், எட்டு ஆண்டுகளில் தற்போது 50 சதவீதத்திற்கும் மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்தாக குற்றம்சாட்டினார்.
கடந்த நான்கு ஆண்டுகள் மட்டும் கூடுதல் சேகரிப்பின் மூலம் அரசுக்கு 20 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசு வருவாய் ஈட்டி இருப்பதாகக் கூறிய டி.ஆர் பாலு வரிகள் மற்றும் ஈடு தொகை மூலம் 26 லட்சம் கோடி ரூபாயை வசூலித்து இருப்பதாக குற்றம் சாட்டினார். மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலையை குறைக்கவில்லை எனவும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் 10 லட்சம் கோடி அளவுக்கு மானியம் வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.