இந்திய அளவில் பெட்ரோல் டீசல் விலை ஏற்றம் காரணமாக வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். இதனால் நாள்தோறும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சில நகரங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாய் அதிகரித்துள்ளது. இதையடுத்து பெட்ரோல் டீசல் விலை ஏற்றம் உலக அளவில் ஒரு பேசுபொருளாக மாறியுள்ளது . மேலும் பலரும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைக்க வாய்ப்பு இல்லை என தமிழக அமைச்சர் மா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். பெட்ரோல் டீசல் மீதான வரியால் தமிழகத்திற்கு பெரும் வருவாய் கிடைப்பதால் வரியை குறைத்து விலையை குறைக்க வாய்ப்பு இல்லை. விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.