2035ஆம் ஆண்டிலிருந்து பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்கப்படும் என்று ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. இதற்காக ஒரு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி EU நாடுகளில் 2030 முதல் விற்பனைக்கு வரும் கார்களில் கரியமில வாயு வெளியேற்றத்தை 55% அளவுக்கு குறைக்க வேண்டும். 2035 ஆண்டு வாக்கில் இது 100 சதவீதத்தை எட்டும் என நம்பப்படுகிறது. மேலும் மின்சார வாகன பயன்பாட்டையும் ஊக்குவிக்க வேண்டும்.
இந்த ஒப்பந்தத்தை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், ஐரோப்பிய ஆணையம் மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புக்கொண்டனர். மின்சாரம் வாகனங்களுக்கு மாறுவதை விரைவுப்படுத்தவும் பருவநிலை மாற்றத்தை எதிர்த்து போராடவும் ஐரோப்பிய ஒன்றியம் இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. மேலும் இது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு பெரிய மாற்றத்தின் தொடக்கம் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.