Categories
தேசிய செய்திகள்

பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த முடியாது…. பிரதமரின் சூப்பர் அறிவிப்பு….!!!!

மக்களின் நலனை கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த முடியாது என பிரதமர் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் நாட்டில் 15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல் மற்றும் டீசலின் விலையில் மாற்றம் செய்யப்படும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தினால் பொதுமக்கள் ஆவேசப்படுவார்கள் என கருதி இம்ரான் கான் அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு மானியம் வழங்கி வந்தது. இந்த அரசு கொள்முதல் விலைக்கும், விற்பனை விலைக்கும் உள்ள வித்தியாசத்தை அடிப்படையாகக் கொண்டு மானியம் கொடுத்தது. இதனால் பெட்ரோல் லிட்டருக்கு 149 ரூபாயாகவும், டீசல் லிட்டருக்கு 144 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டில் புதிதாக ஷெபாஷ் ஷெரீப் அரசு பதவியேற்றுள்ளது. இந்த அரசு மானியம் வழங்குவதை நிறுத்தினால் பெட்ரோல், டீசல் விலை உயரும் என எண்ணெய் மற்றும் எரிவாயு ஒழுங்குமுறை ஆணையம் கூறியிருந்தது. ஆனால் பாகிஸ்தான் பிரதமர் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த போவதில்லை என அறிவித்துள்ளார். மேலும் மின்சாரம் மற்றும் எரிபொருள் மானியங்களை திரும்பப் பெறப் போவதில்லை எனவும் அறிவித்துள்ளார்.

Categories

Tech |