மலைபோல் உயர்ந்து வரும் பெட்ரோல் விலையை குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை எதிர்த்து பெரிய அளவில் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளது. எனவே வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி முதல் 29ம் தேதி வரை நாடு தழுவிய மிக பெரிய போராட்டத்தை நடத்தவுள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே. சி . வேணுகோபால் அறிவித்துள்ளார்.
இவ்வாறு இருக்கையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “நாட்டில் முன்பு எப்பொழுதும் இல்லாத நிலையில் தற்பொழுது வேலைவாய்ப்பின்மை, அரசு சொத்துக்கள் விற்பனை, பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. மேலும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 23.53 ரூபாய் உயர்ந்துள்ளது. மோடி அரசானது மக்களுக்கு தொல்லைகள் மற்றும் பிரச்சனைகள் தருவதில் சாதனை படைத்து வருகின்றது” என்று விமர்சித்துள்ளார்.
இதைபோல், “பெட்ரோல் விலை நாளுக்கு நாள் உயர்த்தப்பட்டு வரி ஏய்ப்பு நடந்து கொண்டு இருக்கிறது. இவ்வாறு இருக்கையில் ஏதாவது ஒரு மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றால் தான் இந்த பெட்ரோல் டீசல் விலை அதிகரிப்பது கட்டுப்படும்” என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
मोदी जी की सरकार ने जनता को कष्ट देने के मामले में बड़े-बड़े रिकॉर्ड बनाए हैं
सबसे ज्यादा बेरोजगारी: मोदी सरकार में
सरकारी संपत्तियां बिक रहीं: मोदी सरकार में
पेट्रोल के रेट एक साल में सबसे ज्यादा बढ़े: मोदी सरकार में pic.twitter.com/pL2369ujn2
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) October 24, 2021