Categories
தேசிய செய்திகள்

“பெட்ரோல், டீசல் விலை உயர்வு கண்டிப்பு”… நூதன போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த காங்கிரஸ்…!!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நூதன போராட்டத்திற்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.

காங்கிரஸ் கட்சி வரும் மார்ச் 31ஆம் தேதி பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து நூதன போராட்டத்தை நடத்த அழைப்பு விடுத்திருக்கின்றது. சென்ற ஐந்து நாட்களில் 4 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு இருப்பதால் காங்கிரஸ் கட்சி இந்த நூதன போராட்டத்தை அறிவித்து இருக்கின்றது. இந்நிலையில் இதுபற்றி காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறியுள்ளதாவது, மக்களின் பணத்தை வெட்கமில்லாமல் உறிஞ்சி எடுக்கின்ற இந்த போக்கை நிறுத்த வேண்டும்.

மார்ச் 31ஆம் தேதி காலை 11 மணி முதல் வீடுகளுக்கு முன்பாகவும் குழுவாகவும் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று கூறியுள்ளார். கையில் கிடைக்கும் ஏதோ ஒரு பொருளை எடுத்து சத்தமிட்டு பாஜகவின் காதுக்கு கேட்கும்வரை எழுப்ப வேண்டும் என்றும் கூறியிருக்கின்றார். பெட்ரோல், டீசல் உயர்வின் மூலம் பாஜக மக்களிடமிருந்து 25 லட்சம் கோடி பணத்தை வாங்கி இருப்பதால் இந்தச் சுரண்டலை கண்டித்து மூன்று கட்டமாக போராட்டம் நடைபெற போகின்றது” என்று கூறியிருக்கின்றார்.

Categories

Tech |