பெட்ரோல் உயர்ந்து வருவதை தொடர்ந்து தனது பைக்கை கைவிட்ட நபர் ஒருவர் குதிரை சவாரி செய்து வருகிறார்.
பீகார் மாநிலம் ஷெயோவர் பகுதியை சேர்ந்த அபிஜித் திவாரி.இவர் மின்துறை ஊழியராக பணியாற்றி வருகிறார்.இவர் குதிரை சவாரியை விட பைக்கில் போவது இரண்டு மடங்கு செலவாகும் அவர் கூறியுள்ளார். இவரது தந்தை குதிரையை பாசத்துடன் வளர்த்து வந்துள்ளார். வீட்டிலேயே குதிரை இருந்ததாலும், குதிரை சவாரியில் பயிற்சி இருந்ததாலும் அபிஜித் பைக்கை கைவிட்டு குதிரை பயணத்திற்கு மாறி உள்ளார்.