மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி பகுதியில் ஏ.டி.சி திடல் அமைந்துள்ளது. இங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தினர். அதாவது அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருள்களின் விலையும் அதிகரித்து வருகிறது.
இதனால் ஏழை, எளிய மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனையடுத்து சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரித்துள்ளதால் மக்கள் மீண்டும் விறகு அடுப்புக்கு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இந்த போராட்டத்திற்கு ஊட்டி தாலுகா செயலாளர் நவீன் சந்திரன் தலைமை தாங்கினார். மேலும் இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.