Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு…. சிலிண்டருக்கு பாடை கட்டி… போராட்டம் நடத்திய கம்யூனிஸ்டு கட்சியினர்..!!

புதுக்கோட்டையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஒன்றியம் சீனிக்கடை முக்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக பெட்ரோல், டீசல், விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஒன்றிய செயலாளர் வீரமுத்து தலைமை தாங்கிய இந்த போராட்டத்தில் விவசாய சங்க மாவட்ட செயலாளர் பொன்னுசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். பெட்ரோல், டீசல், விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்டோவை கயிற்றில் கட்டி ஊர்வலமாக இழுத்து சென்றுள்ளனர்.

இதேபோன்று ஆவுடையார் கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிலிண்டருக்கு மாலை அணிவித்து போராட்டம் நடத்தியுள்ளனர். தாலுகா செயலாளர் நெருப்பு முருகேஷ் தலைமை தாங்கிய இந்த போராட்டத்தில்  மாவட்டக்குழு சுப்ரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.

மேலும் கந்தர்வகோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் ரத்தினவேல், பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் கந்தர்வக்கோட்டை காந்தி சிலையிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு பேருந்து நிலையத்திற்கு வந்து பின்  மத்திய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் பெட்ரோல், டீசல், விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு காரை மாட்டு வண்டியின் மூலம் இழுத்துச் சென்றார்கள். மேலும் சிலிண்டருக்கு பாடை கட்டி மாலை போட்டு பெண்கள் ஒப்பாரி பாடி இறுதி சடங்கு நடத்தினர்.

Categories

Tech |