Categories
தேசிய செய்திகள்

பெட்ரோல்-டீசல் விலை எதிரொலி…. மக்கள் கூடுதல் வரி செலுத்தணும்?…. மத்திய நிதியமைச்சர்…..!!!!!!

மாநிலங்கள் அவையில் நிதிமசோதா மீதான விவாதத்திற்கு பதில் கூறிய மத்தியநிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பெட்ரோலியம் பொருட்கள் விலை உயர்வு குறித்து எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை மறுத்து விட்டார். உக்ரைன்-ரஷ்யா போர் நீண்ட நாட்களாக நடைபெற்று வந்தாலும் இந்தியாவில் தற்போது தான் பெட்ரோலிய பொருட்களின் விலை அதிகரிக்கப்படுகிறது என்பது முற்றிலும் உண்மையல்ல என்று அவர் கூறினார்.

கடந்த 10 வருடங்களுக்கு முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூபாய் 2 லட்சம் கோடி மதிப்புள்ள எண்ணெய் பத்திரங்கள் விநியோகம் செய்யப்பட்டது எனவும் அந்த கடனை திரும்ப செலுத்துவதற்காகத்தான் மக்கள் தற்போதும் பணம் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள் எனவும் நிதியமைச்சர் தெரிவித்தார்.

அந்த எண்ணெய் பத்திரங்களை மீட்பதற்கு 2026 ஆம் வருடம் வரை செலவிட வேண்டி இருப்பதால் அதற்காக இன்னும் 5 வருடங்களுக்கு மக்கள் கூடுதல் வரி செலுத்த வேண்டியிருக்கும் என்று அவர் குறிப்பிட்டார். இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயருவதற்கு அவற்றிற்கு விதிக்கப்படும் அதிக வரியே காரணம் என்று விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், எண்ணெய் பத்திரங்கள் தான் காரணம் என்ற விளக்கத்தை தொடர்ந்து மத்திய அரசு அளித்து வருகிறது.

Categories

Tech |