நாடு முழுவதும் பெட்ரோல்-டீசல் விலையானது அதிகரித்து வருகிறது. தமிழகம், குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் பெட்ரோல் விலையில் ரூ.10 மற்றும் டீசல் விலையில் ரூ.5 குறைக்க பஞ்சாப் மாநில அரசு முடிவு செய்தது. இதனைத்தொடர்ந்து நேற்று நள்ளிரவு முதல் விலை குறைப்பு அமலுக்கு வந்தது. அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலையை முறையே லிட்டருக்கு 10 மற்றும் 5 ரூபாய் குறைக்கபட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்தது. இதனைத்தொடர்ந்து, பல மாநில அரசுகளும் பெட்ரோல், டீசல் மீதான தங்கள் மாநில அரசின் வரியை குறைத்து வருகின்றன.