Categories
அரசியல்

பெட்ரோல், டீசல் விலை குறைக்க இதுதான் வழி…. மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்த ராமதாஸ்….!!!!

பாமக நிறுவனர் ராமதாஸ், மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலைகளை உற்பத்தி வரிக் குறைப்பின் மூலம் குறைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இது குறித்து அவருடைய டுவிட்டர் பக்கத்தில், “நேற்று சென்னையில் டீசல் விலை 76 காசுகளும், பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 காசுகளும் உயர்த்தப்பட்டிருந்தது. டீசல், பெட்ரோல் விலை 6-வது நாளாக தொடர்ந்து உயர்த்தப்பட்டுள்ளது. 8 தவணைகளில் கடந்த 9 நாட்களில் டீசல் விலை ரூபாய் 5.33, பெட்ரோல் லிட்டருக்கு விலை ரூபாய் 5.29 உயர்த்தப்பட்டுள்ளது.

நடுத்தர குடும்பங்கள் மற்றும் ஏழை குடும்பங்கள் இந்த பெட்ரோல் விலை உயர்வால் மாதம் ரூபாய் 5 ஆயிரத்திற்கும் கூடுதலாக இரு சக்கர ஊர்திகளின் எரிபொருளுக்காக மட்டுமே செலவிட வேண்டியுள்ளது. ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 96.76, பெட்ரோல் விலை ரூபாய் 106.69 என்பது நினைத்து பார்க்க முடியாத விலை. ஏற்கனவே டீசல், பெட்ரோல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. அதேபோல் இனியும் விலைவாசி உயரும் என்ற அச்சம் எழுந்துள்ளது. எனவே பெட்ரோல், டீசல் விலைகளை மத்திய அரசு உற்பத்தி வரி குறைப்பு மூலம் குறைக்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |