Categories
உலக செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு…. அரசின் அறிவிப்பால் மக்கள் கடும் அதிர்ச்சி….!!!

பெட்ரோல் மற்றும் டீசலின் விலை மீண்டும் உயர்த்தப்பட்டதால் மக்கள் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.

பாகிஸ்தான் அரசு பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால் அரசு பினையெடுப்பு திட்டத்தை மீண்டும் தொடங்குவதற்காக IMF உடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால் 4-வது முறையாக எரிபொருள்களின் மீதான வரியை மீண்டும் பாகிஸ்தான் அரசு உயர்த்தி உள்ளது.

இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசலின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு லிட்டர் பெட்ரோல் 248 ரூபாய் 74 பைசாவிற்கும், ஒரு லிட்டர் டீசல் 276 ரூபாய் 54 பைசாவிற்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வின் காரணமாக அந்நாட்டு மக்கள் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.

Categories

Tech |