சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலைக்கு ஏற்றவாறு, எரிப்பொருள் விலையை ஒவ்வொரு நாளும் நிர்ணயம் செய்ய அரசு அனுமதித்தது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலையை மாற்றி அமைத்து வருகின்றன. இதன் காரணமாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது ஏற்றம், இறக்கத்துடன் இருக்கிறது.
இந்நிலையில் சென்னையில் 104-வது நாளாக விலையில் மாற்றம் இன்றி பெட்ரோல் ரூபாய் 101.40க்கும், டீசல் ரூபாய் 91.43க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கடந்த 2 வாரங்களாக கச்சா எண்ணெய் விலை ஏறுமுகத்தில் இருக்கிறது. ஆனாலும் உ.பி., உள்ளிட்ட 5 மாநில தேர்தலால் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் இருக்கிறது. ஆகவே தேர்தல் முடிந்த மறுநாளே பெட்ரோல், டீசல் விலை ரூபாய் 3 வரை உயர்த்தப்படலாம் என்று வாகன ஓட்டிகளுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தகவல் வெளியாகியுள்ளது.