சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பேனர்கள் புகைப்படங்கள் கட்சி கொடிகளை அகற்ற வேண்டும் என்று கூறியிருந்த நிலையில் பெட்ரோல் பங்கில் பிரதமர் மோடியின் புகைப்படம் வைக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சட்ட மன்ற தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்கம், அஸ்ஸாம், கேரளா ஆகிய பகுதிகளில் சட்டமன்ற தேர்தலுக்கான நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. மேலும் தேர்தல் நடைபெறும் இடங்களில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள், பேனர்கள், கட்சி கொடிகள் ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது என்று விதிமுறைகள் உள்ள நிலையில் மத்திய அரசின் திட்டங்களை விளம்பரப்படுத்தும் விதமாக பெட்ரோல் பங்கில் மோடி புகைப்படத்துடன் கூடிய பேனர் ஒன்று வைக்கப்பட்டது. இது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவதாக என்று கூறப்பட்டது.
இதை அடுத்து பி.டி.ஐ அதிகாரி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை பிறகு பெட்ரோல் பங்கில் இருக்கும் பிரதமரின் புகைப்படங்கள் 72 மணி நேரத்திற்கு அகற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் அறிவித்திருந்தார். முன்னதாக காங்கிரஸ் தூதுக்குழு பி.டி.ஐ அதிகாரிகளை சந்தித்து மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை பற்றி மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் மோடியின் புகைப்படங்களை பயன்படுத்துவது தேர்தல் நடத்தை விதிமுறைகள் புறம்பானது என்று குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.